ஆந்திர மாநிலம் ஒ.எஸ்.ஆர் மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்தவர் தாரனேஸ்வரர் (21). திருப்பதி கூடூரு பகுதியில் நாராயணா என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து தாரனேஸ்வரர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர்கள் விடுதி அறைக்கு வந்து பார்த்தபோது தாரனேஸ்வரர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விடுதி வார்டன் சீனிவாசலுக்கு (57) தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த சீனிவாசலு சம்பவ இடத்திற்கு வந்து தாரனேஸ்வரரின் உடலைப்பார்த்து அழுதார். திடீரென மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்த மாணவர்கள் மீட்டு கூடுரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீனிவாசலு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.