கடந்த 2020-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாஞ்சில் விஜயன் கடந்த 2020-ஆம் ஆண்டு டிக் டாக் மூலம் பிரபலமான சூர்யாதேவியை என்பவரை அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து, விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில் நாஞ்சில் விஜயன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திடீரென இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகவல் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:நாஞ்சில் விஜயன்