இந்த இனம் உண்மையில் தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசாக மாறும் போது எல்லாம் மாறும் – இதே மாவீரர் நாள் அரசு
விழாவாக அன்று கொண்டாடப்படும்.- திருச்சியில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு …
நான் தலைவன் அல்ல – இந்த மன்னிற்கான அரசியலை செய்யும் தலைவர்களை உருவாக்கும் தொண்டன்….
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் நடைபெற்றது – இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர் – முன்னதாக ஈழத்தில் உயிர் தியாகம் செய்த ஈழத்தமிழர் போராளிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்வுமிக்க எழுச்சி உரை ஆற்றினார் :
லட்சியத்தை விதைத்து இருக்கிறோம் அது சோசியலிச அரசாக வரும் என்றார் நம் தலைவர் பிரபாகரன்.
இவர்களை போல 15 ஆண்டு – 20 ஆண்டுகள் தமிழகத்தை நம் பிரபாகரன் ஆண்டு இருந்தால்
உலக வராலாற்றின் தலை சிறந்த நாடாக நம் தமிழ் நாட்டை மாற்றி இருப்பார்.
இந்த இனம் உண்மையில் தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசாக மாறும் போது எல்லாம் மாறும் – இதே மாவீரர் நாள் அரசு
விழாவாக அன்று கொண்டாடப்படும்.
உன் மொழி செத்து போனதை பற்றி இங்குள்ள ஆட்சியாளர்கள் கவலை பட்டது உண்டா ?
ஒரு மெழுகுவர்த்தி ஏந்தி இந்த நாளில் அஞ்சலி செலுத்தாத மானம் கெட்டவர்கள் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.
இன்று குழந்தைகளிடம் ராஜிவ் காந்தியை யார் என்று கேட்டு பாருங்கள் … அவர்கள் யார் தெரியவில்லை என்பார்கள் … இதே பிரபாகரன் யார் என்று கேட்டு பார்கள் அவர் லீடர் என்பார்கள்.
சிப்காட் கட்ட 3 ஆயிரம் 4 ஆயிரம் ஏக்கர் இங்கு பரிக்கப்படுகிறது – இங்கே உங்கள் உரிமைகள் நசுக்கப்படுகிறது.
சிப்காட் விவகாரம் : உங்கள் நிலம் உரிமை பரிக்கப்படுகிறது.
விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட அரசு உண்டா?
ஊரில் உள்ள கள்ளச்சாராயம்,கஞ்சா விற்பவர்களை விட்டு விட்டு விவசாயிகள் மீது குண்டாஸ் போடுகிறார்கள்
மொழியில் இருந்து வெளியேற்றினார்கள் – பின்னர் வழிபாட்டில் இருந்து வெளியேற்றினார்கள் …இப்போது நீ உழைப்பில் இருந்து வெளி
யேற்றப்படுகிறாய் – தமிழனுக்கு வேலை இல்லை,வெளி மாநிலத்தவர்கள் தான் வேலை செய்கிறார்கள்.
உன் நிலம் பரிப்போய் கொண்டு இருக்கிறது.
பாலஸ்தீனத்திற்கும இஸ்ரேலுக்கும் நடப்பது இங்கும் நடக்கும்.
கொடி ஏத்த விடுவதில்லை – விளக்கு ஏற்ற விடுவதில்லை – எதற்கும் விடுவதில்லை … ஏன் என்றால் நம் மீது பயம்.
காவிரியில் தண்னிர் கேட்ட போது அடித்து விரட்டிய போது இவர்கள் என்ன செய்தார்கள்?
ஈழம் என்பது ஒரு வார்த்தை அல்ல – ஒரு தேச கனவு – தமிழர்களோடு கூட்டணி உள்ள ஒரே கட்சி நம் கட்சி.
வெல்ல முடியாது என்றெல்லாம் நினைக்க வேண்டும் – 31 லட்சம் பேர் வாக்கு அளித்துள்ளனர்,ஏன் அது 61 லட்சமாக பின்னர் 1 கோடியாக ஆகாதா ? முடியும் என்றால் முடியும்.
இன்று தோற்றால் என்ன ? என்றாவது ஒரு நாள் பாவப்பட்டாவாது ஓட்டு போட மாட்டார்களா?
தமிழ் தேசிய இனத்திற்கான அரசியலை நாம் செய்ய வேண்டும் – *நான் உங்களுக்கு தலைவன் அல்ல – இந்த மன்னிற்கான அரசியல் செய்யும் தலைவர்களை உருவாக்கும் தொண்டன் நான்*
உயர்ந்த இலட்சியத்தை வளர்த்து கொள்ளுங்கள் – திராவிடம் ஒழிக என கூற வேண்டாம் – தமிழ் வாழ்க – தமிழ் தேசியம் வெல்க என கூறுங்கள்.