பிரபல நடிகை நமீதா இன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “பொதுவாக நாம் ஆங்கிலப்புத்தாண்டு அன்று நண்பர்களுடன் வெளியே சென்று புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து பெரிய அளவில் இந்தக்கொண்டாட்டத்தைச் செய்கிறோம். ஆனால் அது நம்முடைய கலாசாரம் கிடையாது. பண்பாடு கிடையாது. நம்முடைய புத்தாண்டு என்பது வரும் ஏப்ரல் 14ம் தேதி வரும் சித்திரை முதல் தேதிதான். ஜனவரி 1ம் தேதி நம்முடைய புத்தாண்டு கிடையாது. அதனால் வரும் 14ம் தேதி சித்திரை முதல் தேதியில் காலையில் எழுந்து புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று புது வருடத்தை வரவேற்போம். எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.