Skip to content
Home » பெயரை வைத்து தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்க முடியாது விஜய்… காதர் மொய்தீன்..

பெயரை வைத்து தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்க முடியாது விஜய்… காதர் மொய்தீன்..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முஸ்லிம் மாணவர் பேரவை பொதுக்குழு கூட்டம் திருச்சி மரக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அமைப்பாளர் அன்சாரிஅலி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நான்கு வருடத்திற்கு ஒருமுறை புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கும் நடைமுறையின்படி இம்முறையும் முஸ்லிம் மாணவர் பேரை புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாநிலத் தலைவராக திருச்சி அன்சர்அலி, பொதுச்செயலாளராக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நூர்முகம்மது, பொருளாளராக கள்ளக்குறிச்சி சேர்ந்த சையத்பாசித்ரகுமான்,
உட்பட துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் என நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நடைபெற்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த தேசிய தலைவர் காதர் மொய்தீன்…

இந்தியா கூட்டத்தில் நாளுக்கு நாள் வலு குறைந்து வருவதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு

பா.ஜ.கவின் மீது நம்பிக்கை மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அந்த பயத்தில் தான் இந்தியா கூட்டணி வழுக்குறைகிறது என கூறி வருகின்றனர்.
இந்தியா கூட்டணி ஏதோ ஊராட்சி அல்லது சட்டபேரபை தேர்தலுக்குகாக உருவாக்கப்பட்டது அல்ல. ஒரே நோக்கம் பிஜேபியை அகற்றி எல்லா கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்பதாகும்.

கூட்டணி பேச்சுவார்த்தை என்பது தற்போது காங்கிரஸ் அழைத்து பேசி வருகின்றனர் அடுத்தது கம்யூனிஸ்ட் அதன் பிறகு மதிமுக என
5 வது இடத்தில் நாங்கள் உள்ளோம். வரிசைபடி கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும்.

விஜய் அரசியல் வருகை குறித்ததான கேள்விக்கு ..

இந்தியாவில் சுமார் 3ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவாகி இருக்கிறது. தமிழ், தமிழகம் என்கிற பெயரில் 21 கட்சி பதிவாகி உள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்பது நல்ல பெயர் தான், பெயரை வைத்து நடிகர் என்பதை வைத்து தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்க முடியாது எல்லா நடிகரும் எம்ஜிஆர் கிடையாது, ஜெயலலிதாவும் கிடையாது. திடீர் என வந்து யாரும் எதையும் செய்து விட முடியாது. தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்தை இந்தியாவில் 2வதுநகரமாக மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார் என்ற கேள்விக்கு இது நியாயமான கோரிக்கை நல்ல கோரிக்கை தான். இந்த நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!