நாமக்கல் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், காக்கா தோப்பு பகுதியில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு எடுத்துள்ளார். பெண்ணின் தந்தையும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.