ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த கட்சியின் வேட்பாளர் மேனகா இன்று ஊர்வலமாக சென்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பாளருடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் தங்கள் சின்னமான முழு கரும்பை கையில் தூக்கி பிடித்தபடி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கட்சி நிர்வாகிகள் 2 பேர் பெண் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். தங்களை எப்படி தடுக்கலாம் என அவர்கள் பெண் அதிகாரியை மிரட்டினர். மற்ற போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.