Skip to content
Home » ஸ்ரீரங்கம் பகல் பத்து 7ம் திருநாள்- ரத்தின அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 7ம் திருநாள்- ரத்தின அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில்  வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. பகல் பத்து திருமொழித்திருநாளின்  ஏழாம் திருநாள் இன்று நடக்கிறது. இதையொட்டி  நம்பெருமாள்,  திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்தத்திற்காக, நம்பெருமாள் – தங்க நிற பட்டு அணிந்து
அரைக் கொண்டை அணிந்த அதில் நெற்றி சுட்டிப்பூ சாற்றி, கர்ண பத்திரம்; ரத்தின அபய ஹஸ்தம் ; திரு மார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; அதன் மேல் மகரி, சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 2 வட முத்து சரம், தங்க பூண் பவழ மாலை ; பஞ்சாயுத ஹாரம் அணிந்து;

பின்புறம் – புஜ கீர்த்தி ; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; கையில் தாயத்து சரங்கள்; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து ஆஸ்தான மண்டபம்  எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.