ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 3-ம் நாளான இன்று
நம்பெருமாள் ‘சென்னியோங்கு’ பாசுரத்திற்கு ஏற்ப ரத்தின நீள்முடி கிரீடம், ரத்தின காதுகாப்பு,
வைரஅபயஹஸ்தம், மகர கர்ண பத்திரம், லெட்சுமி பதக்கம், சிகப்புக்கல் தாமரை பதக்கம், வெள்ளைக்கல் ரங்கூன் அட்டிகை,
சந்திரகலை , காசு மாலை, இரட்டைவட முத்து மாலை,புஜ கீர்த்தி, பருத்தி பூ பதக்கம்,அடுக்கு பதக்கங்கள் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
