இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னை தி. நகரில் உள்ள இந்திய கம்யூ அலுவலகத்தில் இந்த விழா நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நல்லகண்ணுவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் நல்லகண்ணுவை வாழ்த்தி முதல்வர் பேசினார். அவர் பேசியதாவது:
தகைசால் தமிழர் நல்லகண்ணு அவர்கள் அமைதியாக ஆழமாக சிந்ததித்து செல்படுபவர். நாம் எல்லோரும் அவரை வாழ்த்தி கொண்டிருக்கறோம். நான் இங்கு நல்லகண்ணு அவர்களை வாழ்த்த வரவில்லை. வாழ்த்து வாங்க வந்திருக்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு துணை நிற்பவர் . நல்லகண்ணு அவர்களுக்கு இன்று மட்டுமல்ல, இந்த வருடம் முழுவதும் விழா கொண்டாட வேண்டும். இன்று அவருக்கு மட்டுமல்ல, பொது உடமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு.
வரும் 29ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பழநெடுமாறன் அவர்கள் தலைமையில் நல்லகண்ணு அவர்களுக்கு கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்களைப்போன்றவாகளுக்கு நல்லகண்ணு அவர்கள் வழிகாட்ட வேண்டும் என்ற கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டணி 7 ஆண்டுகளளாக தொடர்ந்து நீடிக்கிறது. இந்த கொள்கை கூட்டணி மட்டுமல்ல, நிரந்தர கூட்டணி, வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என இலக்கு நிர்ணயித்தோம். இப்போது 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நிலை உள்ளது. அதற்கு நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும். நல்லக்கணணு அவர்களின் வாழ்க்கை நமக்கு வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூ மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் கே. என். நேரு, பொன்முடி, டி ஆர் பாலு எம்.பி, தமிழச்சி தங்க பாண்டியன், மணப்பாறை அப்துல்சமது எம்எல்ஏ உள்பட அனைத்துக்கட்சி தலைவர்கள் விழாவில் பங்கேற்று வாழ்த்தினர்.
கட்சியின் நூற்றாண்டையொட்டி பாலன் இல்லத்தில் அமைந்துள்ள புதிய கொடி கம்பத்தில் இரா.நல்லகண்ணு கொடியேற்றி கட்சி நூற்றாண்டு விழாவை தொடக்கி வைத்தர். விழாவில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.