தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவ இரா.நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் . எ.வ. வேலு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா மற்றும் இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.