தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மணமகனின் மைத்துனர் இறந்ததால் ஹல்டி விழா சோகமாக மாறியது.ஹைதராபாத் குல்சார் ஹவுஸ் பகுதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வந்த முகமது ரபானி காலாபத்தரில் உள்ள மணமகன் வீட்டில் நடைபெற்ற ஹால்டி விழாவின் நிகழ்ச்சியில் மாப்பிள்ளைக்கு மஞ்சள் பூசுவதற்காக முகமது ரபானி சிரித்து கொண்டே சென்றார்.
மஞ்சள் பூசிக்கொண்டிருந்தபோது திடீரென தரையில் சரிந்து விழுந்தார். இச்சம்பவம் பிப்ரவரி 20ம் தேதி நடந்தத நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பிப்ரவரி 21 அன்று மருத்துவமனையில் இறந்தார். இதனால் திருமண வீட்டில் இருந்த கொண்டாட்டம் திடீரென துக்கமாக மாறியது. திருமணமும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் ஹைதராபாத் ஆசிப்நகர் காவல் நிலையத்தில் போவன்பள்ளியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் விஷால்(24), இன்று காலை போவன்பாலியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் வொர்க்அவுட்டின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விஷால் இறந்தார். இந்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகிய நிலையில் சமூகத்தில் நம்மை சுற்றி இருப்பவர்கள் சகஜமாக பேசி சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது .