தமிழக பாஜக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்கள், ஏப்.11 (இன்று) பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்ரவர்த்தி கூறியுள்ளார். நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பாஜக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது
தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு, இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும், மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், அக்கட்சியில் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக, தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் அண்ணாமலை, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து எம்.எல்.ஏவாக பதவி வகித்து வரும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மதியம் 12.45 மணி அளவில் நயினார் நாகேந்திரன், பாஜக அலுவலகம் வந்தார். அங்கு இருந்த நிர்வாகிகள் நயினாரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். எனவே அவர் தான் மாநில தலைவர் ஆக வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.