தமிழக பா.ஜ.,வில் ஜன.,31க்குள் நடக்க வேண்டிய மாநிலத் தலைவர் தேர்தல் மட்டும் தாமதமாகி வந்தது. மாநிலத் தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று நடந்தது. மதியம்2:00 மணி முதல் 4:00 மணி வரை தலைவர் பதவிக்கு மனு அறிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பா.ஜ., தேசிய பொதுச் செயலர் தருண் சுக்கிடம், சட்டசபை பா.ஜ., குழு தலைவர் நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்தார். மாநில தலைவர் பதவியில் இருந்து விலகும் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன், மகளிரணி தேசிய தலைவர் வானதி, முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்டோர் நயினார்நாகேந்திரன் பெயரை முன்மொழிந்து கையெழுத்திட்டனர். நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் அளித்ததால், அவர் தமிழக பா.ஜ., தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இன்று சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், நயினார் நாகேந்திரன் , தமிழக பா.ஜ.,வின் புதிய தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற்கான சான்றிதழை தேசிய பொதுச் செயலர் தருண் சுக், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் அவரிடம் வழங்கினர். இந்த நிலையில் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், வானதிசீனிவாசன், ராம சீனிவாசன், சரத்குமார், சசிகலாபுஷ்பா, அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தலைவரானார் நயினார்.. அண்ணாமலை உள்பட 7 பேருக்கு புதிய பொறுப்பு,,
- by Authour
