Skip to content

அதிமுக தலைவர்கள் மீதான IT , ED வழக்குகள் இனி நீர்த்துபோகுமா? நயினார்நாகேந்திரன் பேட்டி

  • by Authour

தமிழ்நாடு  பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:

பாஜக-​வின் தமிழ்​நாடு தலை​வ​ரானதை நான் பெரு​மை​யாக உணர்​கிறேன்.மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி ஆகியவை மட்டுமே பாஜக-வின் குறிக்கோள், கொள்கை. உறுதியாக தேசிய தலைமை நினைப்பதை தமிழக பாஜக-வால் சாதித்துக் காட்ட முடியும்.

பாஜக-வின் பலம் அதன் கொள்கைகளும், அதன் தொண்டர்களும் தான். இந்த இரண்டும் தான் தற்போது எனக்குள் சேர்ந்துள்ளது.

​பாஜக என்​றைக்​குமே சாதி ரீதி​யாக தலை​வர்​களை தேர்ந்​தெடுப்​ப​தில்​லை. தகு​தி​யின் அடிப்​படை​யிலும், தொண்​டர்​களின் விருப்​பத்​தின் அடிப்​படை​யிலும் மட்​டுமே அனைத்து நிர்​வாகி​களை​யும் தேர்ந்​தெடுக்​கும். பிரதமர் நரேந்​திர மோடி அவர்​களின் மக்​கள் நலத்​திட்​டங்​கள் மற்​றும் இந்​தி​யா​வின் வளர்ச்​சித் திட்​டங்​களைப் பார்த்தே மக்​கள் வாக்​களிக்​கி​றார்​கள்​.

இது உண்மை இல்​லை. ஆந்​தி​ரா, கேரளா, பஞ்​சாப் போன்ற பல மாநிலங்​களில் தேசிய தலைமை விதி​விலக்கை அளித்​திருக்​கிறது. அதே​போல் தமி​ழ​கத்​தி​லும் சில மாவட்ட தலை​வர்​களுக்​கான விதி​களில் விதி​விலக்கு அளித்​திருக்​கி​றோம். இது வழக்​க​மான நடை​முறை தான்​.

அண்​ணா​மலை மிகச் சிறப்​பாக பணி​யாற்​றி​னார் என்​பது சரியே. ஆனால், ஒவ்​வொரு தலை​வரின் கால​கட்​டத்​தி​லும் பாஜக வளர்ந்து வந்​துள்​ளது. ஒவ்​வொரு தலை​வ​ரும் தங்​களுக்கே உரிய பாணி​யில் செயல்​படு​வார்​கள். அனை​வரின் இலக்​கும் கட்​சி​யின் வளர்ச்சி மற்​றும் தமிழ்​நாட்​டில் பாஜக ஆட்​சியை அமைப்​ப​தே.

அதிமுக முக்கிய தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வழக்குகள் கூட்டணி முடிவால் இனி நீர்த்துப் போகும் என்கிறார்களே..?

சட்டம் தன் கடமையை செய்யும்.

அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுக்கு இம்முறை நடிகர் விஜய் பெரும் சவாலாக இருப்பார் போலிருக்கிறதே… அதைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

​விஜயின் கட்சி தற்​போது தான் துவக்​கப்​பட்​டிருக்​கிறது. அதற்​குள்​ளாகவே சவால், சமாளிப்பு என்​ப​தெல்​லாம் தேவை​யில்லை எனக் கருதுகிறேன்​.

அன்புமணி பாஜக கூட்டணியை விரும்புகிறார். ஆனால், ராமதாஸ் அதை விரும்பாததால் தான் அமித் ஷா சென்னை வந்த சமயம் பார்த்து அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்களே..?

யூகங்​களுக்​கும், வதந்​தி​களுக்​கும் நான் பதில் சொல்​லத் தேவை​யில்லை ​.

அதிமுக எம்.பி. தம்பிதுரை மத்திய அமைச்சராகலாம் என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே இருக்கிறது.   அவருக்கு மத்திய  அமைச்சரவையில் இடமளிக்க பரிந்துரைப்பீர்களா?

இது குறித்து பாஜக தேசிய தலைமை தான் முடி​வெடுக்​கும்​.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!