கோவை ஆர் எஸ் புரம் அடுத்த லாலிரோடு பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த பாபு ஆகிய இருவரும் இணைந்து வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியில் விற்பனைக்காக நாய்கள் வளர்த்து வந்துள்ளனர். சுமார் 13 நாய்களை அவர்கள் வளர்த்து வந்த நிலையில் நாய்களுக்கு என தனித்தனியே கூண்டுகள் அமைத்தும் பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை பாபு அங்கு வந்த போது அப்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலாகி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கூண்டில் இருந்த நாய்கள் அனைத்தும் இறந்த நிலையிலும் ஒரே ஒரு நாய் மட்டும் உயிருக்கு போராடிய நிலையிலும் இருந்ததை
கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டத்துடன் உயிருக்கு போராடிய ஒரு நாயை மட்டும் மீட்டு அதற்கான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.தொடர்ந்து நடத்தப்பட்டுள்ள முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து சென்றது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.