மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதாவது 175 இடங்களைக்கொண்ட சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கூட்டம் 164 இடங்களை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து இன்று சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழா கிருஷ்ணா மாவட்டம் கன்னாவரம் என்ற இடத்தில் விமான நிலையம் அருகே அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் நடந்தது.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, நிதின் கட்கரி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆந்திர கவர்னர் நசீர் , முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பிரதமுர் மோடி கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஜனசேனா கட்சித்தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் , சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் உள்பட பலர் பதவி ஏற்றனர். 3 பெண் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
சந்திரபாபு நாயுடு இப்போது 4வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார்.