Skip to content
Home » பாஜக கூட்டணியில் பயணிப்போம்….. சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

பாஜக கூட்டணியில் பயணிப்போம்….. சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திர மாநிலம் அமராவதியில் இன்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜெகன் மோகனால் நான் பல வழிகளில் மோசமாக  துன்புறுத்தப்பட்டேன். இந்த வெற்றி மூலம் பல நெருக்கடிகளில் இருந்து மக்கள் என்னை காப்பாற்றி உள்ளனர்.  நாங்கள் பாஜக  கூட்டணியில் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறோம்.  அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி் முடிவு செய்வோம்.  பாஜக கூட்டணியின் அங்கமாக கிடைத்த வெற்றி இது.

கடந்த 5 ஆண்டு ஆட்சி செய்த  ஜெகன்மோகன்   ஆந்திர மாநிலத்தின் 30 ஆண்டுகால வளர்ச்சியை  பின்னுக்கு தள்ளிவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சந்திரபாபு நாயுடுவை இந்தியா கூட்டணியும் அணுகி தங்கள் அணிக்கும் ஆதரவு கேட்ட நிலையில்  அவர் தனது ஆதரவு பாஜகவுக்கு என தெளிவுபடுத்தி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!