இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஏற்கனவே ஐந்து, டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் 4-1 என்ற புள்ளிகணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்ததாக 3 ஒன்டே போட்டிகளிலும் இங்கிலாந்து விளையாடுகிறது.
இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் முதலாவது ஒன்டே பகலிரவு ஆட்டமாக மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. டக்கட், சால்ட் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். 9வது ஓவர் முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழந்து 75 ரன்கள் சேர்த்திருந்தது. சால்ட் ரன் அவுட் ஆனதன் மூலம் இந்த விக்கெட் பறிபோனது.
அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் டக்கட் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரானா வீசிய பந்தில், ஜெய்ஸ்வாலிடம் இவர் கேட்ச் ஆனார். இவர் எடுத்த ரன்கள் 32. அதே 10வது ஓவரில் புரூக் ரன் அவுட் ஆனார். ரானாவுக்கு ஒரே ஓவரில் 2 விக்கெட் கிடைத்தது. 10 ஓவர்முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து போட்டி விறுவிறுப்புடன் நடக்கிறது. இந்த போட்டியில் கோலி ஆட வில்லை.