இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்து 400 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதில் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 120 ரன்கள் எடுத்தார்.
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை இன்று தொடங்கியது. மதியம் 1.30 மணி அளவில் ஆஸ்திரேலியா 64 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அஸ்வின் டெஸ்ட்களில் மட்டும் 457 விக்கெட்களை எடுத்து உள்ளார். அதில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் மட்டும் 96 என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 2 நாள் ஆட்டம் உள்ள நிலையில் மதியம் 2.20 மணிக்கு ஆஸ்திரேலியா 91 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.