நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மது கடத்தலை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷர்ஷ்சிங் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாகூர் முட்டம் சோதனைச்சாவடி அருகே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் வந்த நபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இதைடுத்து
போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.இதில் காரைக்காலில் இருந்து இரண்டு சாக்கு மூட்டைகளில் 400 பாண்டி சாராயம் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 50,ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபானம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த நாகை தனிப்படை போலீசார், கடத்தலில் ஈடுபட்ட செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை கைது செய்தனர்.
கள்ளச்சாராயம் மற்றும் மதுபான கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து அவர்கள் திருந்தி வாழ வேண்டும் எனும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.