நாகப்பட்டினம் மாவட்டம், உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 -ஆம் ஆண்டு கந்தூரி திருவிழா இன்று இரவு துவங்கிறது இதையொட்டி கொடி ஊர்வலம் துவங்கும் இடமான நாகப்பட்டினம் பே குளம் மீராப்பள்ளியில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கும் பகுதியில் நாகப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இடைவிடாது வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகளை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மத்தாப்பு, வானவெடி மற்றும் சங்கு சக்கரம் போன்றவை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என
அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. இன்று பகல் 12 மணிக்கு கொடி ஊர்வலம் நடைபெற இருக்கிறது நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று 14,ஆம் தேதி கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து வரும் 23, ஆம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் நடைபெற உள்ளது.