Skip to content
Home » தன்னைவிட 37வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் நாகார்ஜூனா

தன்னைவிட 37வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் நாகார்ஜூனா

தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நாகார்ஜுனா. தமிழில் ‘ரட்சகன்’, ‘தோழா’, ‘பயணம்’ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் என்ற அந்தஸ்தோடு சினிமாவில் அடியெடுத்து வைத்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.  நாகார்ஜுனாவின் மகன்கள் நாகசைதன்யா, அகில் ஆகியோரும் நடிகர்களாக இருக்கிறார்கள். இவரது மனைவி அமலாவும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் நிறைய புதிய கதாநாயகர்கள் அறிமுகமாவதால் மூத்த நடிகர்களுக்கு வாய்ப்பு குறைந்துள்ளது.  தொடர் தோல்வி படங்களால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நாகார்ஜுனா தற்போது பிரசன்ன குமார் இயக்கும் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். 63 வயதாகும் நாகார்ஜுனாவுக்கு இந்த படத்தில் ஜோடியாக 26 வயது இளம் கதாநாயகியான மானசா நடிக்கிறார்.   தன்னைவிட 37 வயது குறைந்த நடிகையுடன் நாகார்ஜுனா ஜோடி சேர்வதை வலைத்தளதில் ரசிகர்கள் பலரும் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *