திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நகர் கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம் லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் அறிவுரை வழங்கி வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் , விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் , தமிழ் மண்வளம் செயலிபயன்படுத்துதல் , மண் மாதிரி சேகரிப்பு அவசியம் மற்றும் மண் மாதிரி அடிப்படையில் உர நிர்வாகம் அளித்தல் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சபரிச் செல்வன் அட்மா
திட்டசெயல்பாடுகள் ,உழவன் செயலி பயன்பாடுகள் பற்றி விளக்கி கூறினார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் உழவன் செயலி பதிவிறக்கம் செய்து கொடுத்தார் .வேளாண்மை உதவி அலுவலர் செல்வி .பவித்ரா,வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். இக்கூட்டத்தில்வேளாண்மை உதவி அலுவலர்கள் கவிதா , எடிசன் ,ராஜசேகரன் கலந்துகொண்டனர் .நகர் கிராம ஊராட்சி தலைவர் ஜெரால்டுஆரோக்கிராஜ் மற்றும் நகர் கிராமத்தை சேர்ந்த பல முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர் .