நாகப்பட்டினத்தில் 7,கோடியே 50,லட்சம் ரூபாய் மதிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்படவுள்ள கட்டடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு
மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுர் ஷாநவாஸ்,நாகை மாலி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில், நாகை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அனைத்து அரசுத்துறை கட்டடங்களும் ஒருங்கிணைந்து கட்டப்பட்டு வருவது அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .