ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வருவாய் வட்டாட்சியரை கண்டித்து இன்று நாகையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் காத்திருப்பு போராட்டத்தில்
வலியுறுத்தப்பட்டன. வட்டாட்சியரை பணியிட மாறுதல் செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 8,ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும், அதிலும் தீர்வு எட்டப்படவில்லை என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணி செய்யாமல் புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.