Skip to content
Home » நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

நாகை மாவட்டம்  எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி, விவசாயி. இவர்  பட்டா பெயர் மாற்றம் செய்ய  வல்லம் கிராம நிர்வாக அதிகாரி ராஜாராமை அணுகினார். அப்போது அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.1000 லஞ்சம் கேட்டாராம்.  லஞ்சம் கொடுக்க விரும்பாத  வீரமணி இது குறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனையின் பேரில்  வீரமணி  ரூ.1000 லஞ்சம் கொடுத்தார். அதனை வாங்கிய விஏஓ  ராஜாராமை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!