சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி நாகையில் இன்று பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த ஆசிரியர்களை அங்கு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு குவிந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தமிழக அரசு சம வேலைக்கு,சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு வெவ்வேறு அடிப்படையில் சம்பளம்
வழங்குவதை அரசு தவிர்க்க வேண்டும் என்றும், அடிப்படை ஊதியத்தில் உள்ள வித்தியாசத்தை களைய வேண்டும் என்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.இதையடுத்து முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கு மேற்பட்ட பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளை போலீசார் கைது செய்தனர்.