நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக அதிமுக நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் கீழையூர் ஒன்றியத்தில் செருதூர்,காமேஸ்வரம் ,தண்ணீர் பந்தல்,விழுந்தமாவடி புதுப்பள்ளி வேட்டைக்காரன் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரப்புரையின் இடையில் கன்னித்தோப்பு கடைவீதியில் பிரச்சார
வாகனத்தை நிறுத்திய வேட்பாளர் சுர்ஜித் சங்கர், அங்கிருந்த டீக்கடைக்கு சென்று டீ தயாரித்து பொது மக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார் . இதில் தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.