நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி, கண்ணித்தோப்பு கிராமத்தில் பிரசித்திப் பெற்ற சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மாசி மக தீமிதி திருவிழா கடந்த 6ம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 501 பால்குட ஊர்வலம் இன்று வெகு
விமர்சையாக நடைபெற்றது. காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்களின் பால்குட ஊர்வலமானது தம்பிரான் குடியிருப்பு பகுதியில் இருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடங்களை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பெண் பக்தர்கள் சாமி ஆடியப்படி பால்குட ஊர்வலத்தில் வந்தனர். தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்