புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களுக்கு மதுப்பாட்டில்கள் மற்றும் பாண்டி சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் தினந்தோறும் காரைக்காலில் இருந்து நாகைக்கு மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாரயக் கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கலசம்பாடி பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது அவ் வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்ட போது டிக்கி மற்றும் பின் இருக்கைகளில் மூட்டை , மூட்டையாக பாண்டி சாராயம் கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுப்பட்ட காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தி வந்த 650 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யபட்ட நபர் மீது வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்து எந்த பகுதி, யாருக்கு கடத்தப்பட்டது குறித்தும் தீவிர விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.