Skip to content

நாகையில் சிவசக்தி நிறுவனம் பலகோடி மோசடி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

  • by Authour

நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாகையின் பழமைவாய்ந்த நம்பகத்திற்குறிய நிறுவனம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர். குறிப்பாக சிவசக்தி நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால்,  வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர். இந்த நிலையில்

முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் கால அவகாசம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். பின்னர் நிதி நிறுவனத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட பயனாளிகள் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பலமுறை காலஅவகாசம் கொடுத்தும் இதுவரை நிதியை திருப்பி செலுத்தாத காரணத்தால் வாட்ஸ்அப் செயலி மூலம் ஆத்திரம் அடைந்த ஏமாற்றமடைந்த மக்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திரண்டனர். பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வருவதால் அவர்கள் ஆட்சியர் அலுவலகம் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!