Skip to content

நாகையில் ரூ.200 நலத்திட்ட உதவிகள்- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் இல்ல திருமண விழா, தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

நாகை  மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்ல திருமண விழா, தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நாகையில்  நடைபெறுகிறதுழ.

இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில்  முதல்வருக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அங்கிருந்து காரில்  நாகைக்கு சென்றார்.  அங்கு அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

நாகை புத்தூர் ரவுண்டானா கலைஞர் அரங்கத்தில் இன்று காலை  நடைபெற்ற  மாவட்ட செயலாளர் கவுதமன் இல்ல திருமண விழாவை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ள ஐடிஐ திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. அதில் முதல்வர் பங்கேற்று  38 ஆயிரத்து 956 பேருக்கு ரூ. 200 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
முதல்வர் வருகையையொட்டி இன்று  நாகை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

error: Content is protected !!