நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி முதல் காமேஸ்வரம் எல்லை ரோடு கன்னிதோப்பு சாலை கடந்த 10வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வியாபாரிகள் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், பள்ளி வாகனங்கள் மற்றும் அவசர நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர முடியவில்லை எனவும் விவசாயிகள் அதிக வசிக்கும் இப்பகுதிகயில் இருந்து காய்கறிகளை
விளைவித்த விற்பனை செய்ய முடியவில்லை குற்றம் சாட்டிய கிராம மக்கள் பலமுறை இதுகுறித்து மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர் மேலும் தெருவிளக்கு மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.