பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் மருத்துவ சேவையை போற்றும் விதமாகவும், அவரின் சேவையை பின்பற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 200க்கும் மேற்பட்ட செவிலிய பயற்சி மாணவிகள் ஒரே நேரத்தில் ஒளிவிளக்கு ஏற்றி உறுதிமொழி எடுத்து கொண்டனர் . இந்நிகழ்ச்சியைசுகாதார துணை இயக்குனர் டாக்டர் விஜயகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து நவீன செவிலியர் கொள்கைகளின்
முக்கியத்துவத்தையும், ஆடம்பரங்களை விட சமூகப் பொறுப்புகளையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், தொற்றுநோய் சூழ்நிலையில் செவிலியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் மற்றும் தங்களை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுரைகள் வழங்கப்பட்டது.