நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ்(67) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட சித்தமல்லி பகுதியைச் சேர்நதர் செல்வராஜ். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராக உள்ளார். செல்வராஜ் 6 முறை நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 3 முறை வெற்றி பெற்றவர். தற்போது மூன்றாவது முறையாக நாகப்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று காலை இறந்தார்.