புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாண்டி சாராயம் மற்றும் மது கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டதுடன் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெளிப்பாளையம், நாகை நாகூர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் செல்லும் முக்கிய சாலையான ஏழை பிள்ளையார் கோவில் அருகில் சட்டத்துக்கு புறம்பாக அச்சமின்றி
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதியான நாகை மாவட்டத்திற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புதுச்சேரி மாநில மது பாட்டில்களை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரை கடத்தி வந்தபோது அதிரடியாக தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதைபோல் வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே புதிய பேருந்து நிலையத்தில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த அதேபகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி மற்றும் பாப்பாகோவிலை சேர்ந்த திவ்யா ஆகிய இரு பெண்கள் என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 1000, மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பிடிக்கப்பட்ட மது பாட்டில்களை பார்வையிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்சிங் காவல்துறையினரை பாராட்டினார்.