Skip to content

நாகை-கோவையில் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் கொண்டாடிய இஸ்லாமியர்கள்…

  • by Authour

இஸ்லாமியர்களின், புனித ரமலான் நோன்பு கடந்த மாதம் 10 ம் தேதி பிறை பார்த்து துவங்கப்பட்டது. 30 நாட்கள் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் தமிழகத்தில் பிறை தெரிந்ததால், தர்கா மற்றும் பள்ளிவாசல்களில் இன்று ரம்ஜான் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இன்று ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன்

கொண்டாடப்பட்டது முன்னதாக ஆண்டவர் தர்காவில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, பாலஸ்தீன இஸ்லாமியர்கள் . மற்றும் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிந்து வந்த இஸ்லாமியர்கள், ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி

ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதைப்போல் ரம்ஜான் பண்டிகையெட்டி, நாகை, நாகூர், திட்டச்சேரி, பெரவச்சேரி, ஏனங்குடி, வவ்வாலடி, தோப்புத்துறை, ஆழியூர், பாப்பாகோவில் உள்ளிட்ட ஏராளமான பள்ளிவாசல்களில் இன்று சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை முன்னிட்டு கோவை உக்கடம் ஜமாத் அகலயே ஹதீஸ் பள்ளி வாசல் சார்பில் பள்ளி நிர்வாகி தயூப்கான்,இமாம் ஷதகத்துலா உமரி,தலைமையில் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.இதில் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். திருச்சியிலும் பல்வேறு இடங்களில் ரம்ஜான் தொழுகை  நடந்தது. ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!