நாகப்பட்டினம், மறைமலை நகரில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா கடந்த 21,ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா. 2, ம் வெள்ளியையொட்டி நேற்று கோவிலில் 108,திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம் மற்றும் தாலிக்கயிறு உள்ளிட்ட பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதனை பூஜித்த பெண்கள், மந்திரங்கள் ஓதி, மனமுறுகி அம்பாளை வேண்டிகொண்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய
கருமாரி அம்மனுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் வாழ்வாதாரம் செழித்து, தாலிபாக்கியம் நிலைத்து சகல சௌபாக்கியம் வேண்டி ஒரே நேரத்தில் அனைத்து பெண் பக்தர்களும் சுவாமிக்கு தீபாராதனை செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.