ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் இருசக்கர விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார் ஹெல்மெட் அணிவதன் அவசியம் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது பாதுகாப்பான வேகத்தில் செல்ல வேண்டும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு
பிரச்சாரங்களை வலியுறுத்தி நடைபெற்ற இந்த பேரணியில் நாகப்பட்டினத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியபடி பேரணியாக புதிய பேருந்து நிலையம்,வெளிப்பாளையம், மருத்துவமனை சாலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு,பாரதி மார்க்கெட்,பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நாகப்பட்டினம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தடைந்தது