நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு ,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57) இவர் அதே பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளதோடு தனபாலன் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தனபாலன் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்வேளூர் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து அவர் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸக்கு பரிந்துரை செய்தார். அதனை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் நாகை சிறையில் இருந்த தனபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.