நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் கடல்நிலம் சார்ந்த விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடல்வாழ் விவசாயிகளின் நிலத்தை நாகை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமித்து வருவதாக விழுந்தமாவடி கிராம விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக நூறு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்துவரும் தங்களை வெளியேற்றி பல ஆண்டுகளாக சாடுபடி செய்யப்பட்ட தென்னை, முந்திரி, பனை, வேம்பு, சவுக்கு போன்ற மரங்களை அழிப்பதற்கும் மரங்களுக்கு இடையே ஊடு பயிராக சாகுபடி செய்யப்பட்டு வரும் நெல், கடலை பயிரிடப்பட்டுள்ள நிலங்களை அழிக்கவும் வனத்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட விழுந்தமாவடி கிராம விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் மனு அளித்தனர். கடல்வாழ் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தங்களை வனத்துறை அதிகாரிகள் மிரட்டுவதையும், பெண்களை அச்சுறுத்துவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என விழுந்தமாவடி கிராம விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகையில் விவசாயிகளின் நிலத்தை வனத்துறையினர் ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டு
- by Authour
