கடைமடை பகுதியில் கருகும் குறுவை பயிறுக்கு, உடனடியாக காவிரி நீரை திறந்து விடக்கோரி நாகையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 100, க்கும் மேற்பட்டோர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன்-ஜூலை
மாதத்திற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு உடனடியாக திறந்து விட வேண்டும் என்றும். காவிரி நதிநீர் ஆணையம் தமிழ்நாட்டுக்கு உடனடியாக காவிரி நீரை திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட கோரியும், மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு தடை விதிக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.