நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் நேற்று இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை ராணுவம், எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்து சென்றது. அவர்களை பருத்தித்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. இன்று அவர்களை கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைக்க இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்றவர்கள் என தெரிகிறது.