தமிழகத்தில் நாகை,புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கையில் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வது உண்டு. இதேபோல் அவ்வபோது
இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலைகள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் மீனவர்கள் கோடிலிங்கம்,
மணியன் ஆகியோர் காயமடைந்துள்ளனர் மீனவர்கள் படகில் இருந்த ஜிபிஎஸ், செல்போன் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனர். மீனவர்களை ரப்பர் தடி, கத்தியால் தாக்கி, இடுப்பில் கட்டியிருந்த வெள்ளி அருணா கொடியை அறுத்து சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் ஆகியோர் ஆறுதல் கூறியுள்ளனர்.