Skip to content

கைவிரல் துண்டான நாகை மீனவர்… மீன் வளர்ச்சி தலைவர் ஆறுதல் ..

  • by Authour

கடந்த 14 ஆம் தேதி கொடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 6, பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி படகில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். கடற்கொள்ளையர்களின் கொலைவெறி தாக்குதலில் நாகை மாவட்டம் நம்பியா நகரை சேர்ந்த மீனவர் முருகனின் இடது கையின் மூன்று விரல்கள் வெட்டப்பட்ட நிலையிலும் மற்ற மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மீனவர்கள் சிகிச்சை பெற்று

வீடு திரும்பிய நிலையில் நாகை மாவட்டம் நம்பியார்நகரில் இன்று தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இலங்கை கடற் கொள்ளையர்களால் கைவிரல் துண்டான மீனவர் முருகனுக்கு 25 ஆயிரம் ரூபாயும், காயமடைந்த மீனவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் தனது சொந்த நிதியில் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!