நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவரின் 468வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 12ம் தேதி நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடக்கிறது. இதையொட்டி 12ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக வரும் 21ம் தேதி வேலை நாளாக இருக்கும் என கலெக்டர் ஆகாஸ் அறிவித்துள்ளார்.