உலகம் முழுவதும் மனித சமூகத்தை சீரழித்து வரும் போதை பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகப்பட்டிணம் மாவட்ட காவல்துறை சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார் இப்பேரணியானது நாகை அவுரி திடலில் துவங்கி, காடம்பாடி, வெளிப்பாளையம் வழியாக நாகை நகராட்சியில் நிறைவடைந்தது பேரணியில் பங்கேற்ற காவலர்கள்
போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் இதனால் குடும்பத்திற்கு எவ்வாறு இழப்பு ஏற்படும் இதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர் மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் பதித்த 200க்கும் மேற்பட்ட டி-ஷர்ட்டுகளை பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்,இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர்,பெண் காவலர்கள்,ஊர் காவல் படையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.