நாகப்பட்டினம் நகராட்சி 36 வார்டுகளில் பாதாள சாக்கடை மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 19, 20, 21, வார்டுகளில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு செல்லும் குடிநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் பூமிக்கு அடியில் ஒரே பகுதியில் செல்வதால் அடிக்கடி உடைந்து கழிவுநீர் குழாய் நல்ல தண்ணீர் குழாயுடன் சேர்ந்து விடுவதால் தண்ணீர் மாசு அடைந்து விடுகிறது. கடந்த ஒரு மாத காலமாக கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசி குடிநீர் விநியோகம்
செய்யப்படுவதால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டுகின்றனர். நிறம் மாறி வரும் குடிநீரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பதால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். பாதாள சாக்கடை குழாயும் குடிநீர் குழாயும் நிலத்தடியில் அருகருகே இதுபோல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே நாகப்பட்டினம் நகராட்சி நிர்வாகம் குழாய்களை சீரமைத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என 19.20,21 வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்