தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருப்பதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நாகையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். நாகை மாவட்டத்தில் உள்ள நாகை சட்டமன்ற தொகுதிகளில் 1,84,198 வாக்காளர்களும் கீழ்வேளூர் தொகுதியில் 1,69,040 வாக்காளர்களும், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 1,88194 வாக்காளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் 651 வாக்கு சாவடிகள் இருப்பதாகவும், ஆண் வாக்காளர்கள் 2,65,472 எனவும், பெண் வாக்காளர்கள் 2,75_926 ம் இதர வகுப்பினர் 24 என மாவட்டம் முழுவதும் 5,41, 422 வாக்காளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்பும் நபர்கள் அந்த்தந்த வாக்குச் சாவடி மையங்களில் வருகின்ற 4. 6, 18, 19.11.2023 தேதிகளில் உரிய படிவங்களை கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
